பெட்ரோல் டீசல் விலை சாதாரண சாமான்ய இந்தியனின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் பொன்னான கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இதற்கு மட்டும் ஒரு விடிவு காலம் இல்லை.
பெட்ரோல் டீசல் விலை ஒரு முறை உயர்ந்தாலே போதும்.
விலை வாசி உயர்வுக்கு இது ஒரு அஸ்திவாரம் மட்டுமே.
இது உயர்ந்தால் வண்டி வாடகை உயரும்.
வண்டி வாடகை உயர்ந்தால் அனைத்து சாதனங்களின் விலையும் தானாகவே உயர்ந்து விடும்.
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் புண்ணியத்தால் கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 142 டாலராக இருந்த போது தடால் என இங்கு விலை உயர்வு வந்தது.
அது நியாயமான ஒன்று என எண்ணலாம்.
அடுத்த சில மாதங்களில் முப்பது முதல் நாற்பது டாலராக குறைந்த போது இங்கு விலை குறைக்கப்படவில்லை.
ஆளுங்கட்சிகளும் எதிர்கட்சிகளும் இந்த விசயத்தில் சொல்லி வைத்துக் கொண்டு விளையாடுவார்கள்.
நான் நாலு ரூபாய் கூட்டுகிற மாதிரி கூட்டுகிறேன். நீ போராட்டம் பண்ணு. பதிலுக்கு ஒரு ரூபாய் குறைத்து விடுகின்றேன் என்று கண்ணா மூச்சி விளையாடுவார்கள்.
நாலு ரூபாய் கூடிய விஷயத்தை இந்த ஒரு ரூபாய் விலைக் குறைப்பு மறைத்து விடும்.

நாமும் அதை மறந்து விட்டு 'டீலா நோ டீலா, மானாட மயிலாட' பார்த்துக் கொண்டிருப்போம்.
சில நாட்களுக்கு முன் மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா அறிக்கை விட்டிருக்கின்றார்.
விலை உயர்வுக்கு அவர் சொல்லும் காரணம், இந்திய எண்ணைய்க் கம்பனிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை தான்.
இவர் சொல்லுவதைப் பார்த்தால் இந்த நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றும்.
ஆனால் என்ன கொடுமை சரவணன் சார் இது???

நடுத்தர இந்தியனின் ரத்தத்தை டியூப் வைத்து உறிஞ்சும் இந்தக் கம்பனிகளின் வருமானம் மற்றும் லாபத்தைப் பார்த்தால்.... நமக்கே தலை சுற்றும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரசன் .... இதன் இந்த வருட லாபக் கணக்கை பாருங்கள்...
Profit in 2009-10 Rs:10,22,05,000,000
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் .. இதன் லாபம்

Profit in 2009-10
Rs. 7,35,90,000,000
இந்த ஏழை நிறுவனங்கள் செழிப்பதற்காக, வளர்வதற்காகத்தான் இந்த விலையேற்றம்.
கூடுதலாக ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம்.
நம் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மொத்த மக்கள் தொகையில் நாற்பது சதவிகிதத்திற்கும் கூடுதல் உள்ள ஏழை மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணையின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, இனியும் உயர்த்தபடவுள்ளது.

கூடுதல் சிறப்பாக தமிழகத்தில் இப்போது மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கனவான்கள் எல்லாம் நன்றாக இருக்கட்டும். நல்லா இருங்க ராசாக்களா?
'குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம், உங்களுக்குக் கிடைச்ச அடிமைகள் ரொம்ப நல்லவங்க'