Tuesday, 29 June 2010

48 டிகிரியும் கருகும் கனவுகளும்



மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணி நிமித்தமாக சுற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன்.

இப்போது இங்கு உச்ச கட்ட வெப்ப நிலை... வெளியில் இறங்கி பத்தடி கூட நடக்க முடியாது.. சுருண்டு விழுந்து விடுவோம்...

A/C இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.

ஆனால் காலையில் ஏழு மணிக்கே எழுந்து வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை பரந்த அளவில் பார்க்கலாம்.

நீலம், சிகப்பு , மஞ்சள் கலரில் சீருடை அணிந்து கட்டிடப் பணிகளில் ஈடுபடும் இவர்களின் நிலைமையை நேரில் பார்த்தால் நமக்கே கண்கள் கலங்கும். இதில் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

சம்பளம் மிகக் குறைவு, அதுவும் மாதா மாதம் ஒழுங்காகக் கிடைக்காது. ஏன் என்று கேள்வி கேட்கவும் முடியாது. கேட்டால் அடி உதை...சரியான உணவு கிடைக்காது... எட்டு முதல் பத்து பேர்கள் சேர்ந்து தங்கும் இருப்பிட வசதி. நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்தபடி அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

(அதிலும் பெரும்பாலானோர் இந்தக் குறைந்த ஊதியத்தையும் சேமிப்பதில்லை.

முக்கியமான மூன்று வழிகளில் இவர்களது சேமிப்பு கரைந்து விடும்.
இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.
துக்கத்தை மறக்க இதை விட்டால் இவர்களுக்கு வேறு நிவாரணம் இல்லை என்பதே உண்மை.
டெலிபோன் கார்டுகள்: சிலர் கணக்கில்லாமல் மணிக்கணக்கில் சொந்த ஊருக்குப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

குடிப்பழக்கம் : வெளி நாட்டு மது வகைகள் இங்கு மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும். இதை கள்ளத்தனமாக விற்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கின்றது.
கடன் வசதி உண்டு. சம்பள தினம் வந்து சரியாகப் பணத்தை வாங்கிச் செல்வார்கள்.
விபச்சாரம் (என்ற அபச்சாரம்) : பெண் வாணிபம் இங்கெல்லாம் வழியோரக் காட்சிகள். பல நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இலகுவாக மலிவு விலையில்...உள்ள அவலம்...)

பெரும்பாலானோர் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டவர்கள்... இவர்களுக்கு நீதி கிடைக்க இங்கு எந்த சக்தியும் உதவி செய்யாது..


இங்குள்ள சிறைச் சாலைகளில் நாட் கணக்கல்ல... மாதக் கணக்கல்ல... வருடக் கணக்காக... வாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் ஏராளம்.

ஒவ்வொருவருக்கும்
அவரவர் சோகங்கள்.. இவர்களைப் பற்றி இங்கு எந்த இந்திய அமைப்பிற்கும் கவலை கிடையாது.

உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் தூதரகங்கள் இருக்கின்றன...
அவை அனைத்துமே தத்தமது நாட்டின் சொந்தக் குடிமக்களுக்கு ஏதாவது பிரசனை என்றால் முன்னுரிமை கொடுத்து உதவுகின்றன..

நமது இந்தியாவிற்கும் இருக்கின்றன...உலகம் முழுவதும்..
ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த உதவியும் கிடைக்காது.
கோட்டும் சூட்டும் அணிந்து இவர்களை பெரும் விழாக்களில் மட்டுமே காண முடியும்.

உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா இவர்களை உங்களால் சாதாரணமாக அணுக முடியாது.

இந்தச் சூழ்நிலையில் நாம் அலசிப் பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

வெறும் 7000 ரூபாய் சம்பளத்திற்காக ஒரு லட்சத்திற்கும் மேல் ஏஜெண்டுகளுக்கு தாரை வார்த்து இந்தக் கொடுமையை அனுபவிக்க உங்களுக்கு என்ன விதி?

புறப்படுவதற்கு முன்பே விசா, நிறுவனம், சொன்ன வேலைக்கான உறுதி இவைகளைப் பற்றி நன்கு விசாரிக்காமல் விமானத்தில் ஏற உங்களுக்கு என்ன அவசரம்?

வீடு, குடும்பம், மனைவி, மக்கள் அனைத்தையும் விட்டு இங்கு வந்து கோடிகளா சம்பாதிக்கப் போகிறீர்கள்?

அனல் கொதிக்கும் இந்த வெப்பத்தில் வேலை செய்து உடல் நலம் சீரழிவதை விட உள்ளூரில் இந்தப் பணத்தை உங்களால் ஈட்ட முடியாதா?

இன்று நம் நாட்டில் ஒரு தொழிலாளியின் தினசரி ஊதியம் குறைந்த பட்சம் 300 ரூபாய்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு உதவ இங்கு யாரும் இல்லை.

சொந்த முயற்சி... கடின உழைப்பு.. கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டம் இவை இருந்தால் ஒழிய இங்கு தாக்குப் பிடிப்பது மிகக் கடினம்.

தகுந்த தகுதி, கூடிய அனுபவம், தன்னம்பிக்கை இவை இருந்தால் மட்டுமே வெளி நாட்டு வேலை எனும் ஆசையைக் கனவு காணுங்கள்... தயவு செய்து...


தொடர்புடைய பதிவுகள்

அம்மா எனும் ஒரு சொல்!

சுனிதா கிருஷ்ணன்

எங்கே செல்லும் இந்தப் பாதை

(19) திரா'விட'ப் பெத்தடினும் வளைகுடாத் தமிழர்களும்

கருகும் கனவுகள் !



37 comments:

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு, இதை பிரிண்ட் எடுத்து இந்த மாதிரி வேலைக்கு ஆள் எடுக்கும் விளம்பரம் வரும் பொழுது அங்கே சென்று விநியோகிக்க வேண்டும்,

செய்வோம், தொடங்குவோம் இந்த நல்ல பணியை இன்றே.

kishore said...

நல்ல பதிவு நண்பா..

Anonymous said...

welden my dear friend

ஜீவன்பென்னி said...

சரியாத்தான் சொல்லுறீங்க. நம்ம மக்கள் கேக்கத்தான் மாட்டாங்க. அரசாங்கமும் இது ஒரு வழிபண்ன மாட்டாங்க. இவங்க வேலை செய்றத பாக்குறப்போ மனசுக்கு ரொம்ப கடினமா இருக்கும். இந்த வெய்ல்ல துறைமுகத்துல கண்டெய்னர்குள்ள இருந்து அன்லோட் பண்ணுறவங்க பாடு இன்னும் கொடுமை.

யூர்கன் க்ருகியர் said...

great article friend !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பேசாம, அந்தந்த நாட்ல இருக்கும் பதிவர்கள்.இதுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு,அவங்களுக்கு தெரிஞ்ச..” பிராடு ஏஜண்ட் பேரை “..போட்டு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம் பாஸ்...

அரசாங்கத்த நம்பின , போபால் மாறி 26 வருஷம் வெயிட் பண்னனும்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்க மனசுல என்ன தோணுதுண்ணு தயங்காமச் சொல்லுங்க!!!
//

சொல்லீட்டேன் பாஸ்...

goma said...

ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினான் என்ற வசனம் நினைவுக்கு வருகிறது

Shan Nalliah / GANDHIYIST said...

INFORMING/EDUCATING THIS TO ALL IGNORANT POOR BROTHERS/SISTERS IS VERY IMPORTANT! TNG/GOI SHD INTERVENE!OTHERWISE VICTIMS FROM S.ASIA WILL CONTINUE! THIS IS URGENT NEED THAN CHEMMOLI MAANAADU! 25 SL-HOUSEMAIDS KILLED EVERYMONTH IN CRUEL ME-ARAB MUSLIM HOMES!BUT GOSL BEGGING THEM FOR MONEY!EMBASSIES DO NOTHING!SHAME ON THEM ALL!

Unknown said...

ஏமாற்றுபவன் ஏமாறுபவனை தேடி ஏமாற்றுவதால் இந்த ஏமாற்றும்...

உங்களின் பதிவு மிகவும் அருமை. இதை கொஞ்சம் ஆழமாக கண்டுபிடித்து வேரோடு அழிக்க வேண்டிய விஷயம். முடிந்தால் இதை படித்த அனைவரும் உங்களால் முடிந்த முயற்சியை மேற்க்கொள்ளுங்கள்.

இதை படிக்கும் போது எனக்கு தோன்றுவது, குறிப்பாக இந்த கிராம்புரவானிகளின் பேராசை என்று தான் சொல்ல வேண்டும்.

இவர்களை காப்பாற்ற வானொலி அல்லது தொலைக்காட்சி மூலம் விழிப்புணர்வு விளம்பரம் செய்து தெளிவு பெற வைக்க வேண்டும்..

Subramani said...

hats off to you my dear friend! this is the real life of the peoples who is working in gulf. hope peoples will realize their hope country is far better than any other country. one thing is true our government and officials will talk everything never do anything in practical. hope some day will be good day for all those who working in gulf & other countries! jaihind

தமிழ் உதயம் said...

வெறும் 7000 ரூபாய் சம்பளத்திற்காக ஒரு லட்சத்திற்கும் மேல் ஏஜெண்டுகளுக்கு தாரை வார்த்து இந்தக் கொடுமையை அனுபவிக்க உங்களுக்கு என்ன விதி?



எவ்வளவு சொன்னாலும், இத்தகையவர்கள் கேட்க மறுக்கிறார்களே.

VASAVAN said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே...

ஏஜெண்டுகளிடம் ஏமாந்தவர்களின் கதை இன்னும் நிறைய இருக்கின்றது..
இதுபோல் விழிப்புணர்வு தரும் பதிவுகள் நிறைய வர வேண்டும்..
வாழ்த்துக்கள்..

Swengnr said...

உரக்க சொல்லுங்கள் ஊருக்கு. காசு சம்பாதிக்க போய் இப்படி அவதி படுபவர்களை பற்றி! பகிர்வுக்கு நன்றி!

siraj said...

neega sollurathu sarithan.sila peru 5 yearku mealaum engave erukaga.kallivallinu nameoda alaium peru neraya.antha govermentku evagala pudipathu easy,aana avangaluku evaga thavai kuraintha salaryla.manasu kastama eruku.

ILLUMINATI said...

நண்பரே!இதை அரசாங்கமே சுலபமா சரி செய்து விடலாம்.போலி விசா,பிராடு agent... இதெல்லாம் அரசாங்கம் நினைச்சா சரி பண்ண முடியாததா?அப்புறம்,இந்திய தூதரகங்கள் பற்றி,இவனுங்களும் டம்மி பீசு தான்.

//அரசாங்கத்த நம்பின , போபால் மாறி 26 வருஷம் வெயிட் பண்னனும்.. //

அப்பயும் நல்ல செய்தி கிடைக்காது பட்டு.நியாயமும் தான்...

MR.BOO said...

Many thanks for your precious comments and boost up dear
ராம்ஜி_யாஹூ
kishore
Anonymous
ஜீவன்பென்னி
யூர்கன் க்ருகியர்
பட்டாபட்டி
goma
Shan Nalliah/GANDHIYIST
Rajkumar
Subramani
தமிழ் உதயம்
VASAVAN
Software Engineer
siraj
ILLUMINATI....

பொன் மாலை பொழுது said...

கல்வி அறிவு இல்லாததே இதற்கு முழு முதற்காரணம்.
நம்முடைய அரசுகளும் இதுகுறித்து வாய் திறப்பதில்லை.
தூதுரகங்கள், பெரும்பாலும் இது போன்ற நிகழ்வுகளை பற்றி கண்டுகொள்வதில்லை.
நிறைய பார்த்தாகிவிட்டது. வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் என்றால்
நம்மில் நிறைய பேருக்கு சினிமா காமெடிதான் பன்னதெரியும். அன்றி மனிதம் அறிந்து
செயல் படுவோர் இல்லை.

கீழே உள்ள இணைப்பில் சென்று ஒரு பதிவினை படிக்கவும்.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2009/06/blog-post_22.html

நன்றி

Jey said...

நிதர்சனமான உண்மைகள், எனக்கு தெரிந்து இதுமாதிரி அங்கு போய் கஷ்டப்படுகிற சில பேர் ஊருக்கு வந்து உண்மைகளை சொல்லுவதில்லை, மாறாக ஈசியான வேலை, நல்ல சம்பளம் என்ரு சொல்லிவிடுகிறார்கள், அதுவேகூட சிலசமயம், அடுத்தவர்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. மத்தபடி நம்ம கவருமெண்டு, தூதரகம் இவங்களை இன்னுமா நம்புறது, தக்களி ரத்தம் கொதிக்குது மக்கா.

kannan said...

வாருங்கள் வந்து பாருங்கள்
நண்பர்களை தேடுங்கள்
http://www.valaiyakam.com/

கருடன் said...

//வெறும் 7000 ரூபாய் சம்பளத்திற்காக ஒரு லட்சத்திற்கும் மேல் ஏஜெண்டுகளுக்கு தாரை வார்த்து இந்தக் கொடுமையை அனுபவிக்க உங்களுக்கு என்ன விதி? //

Ade oru lac kodutha Indiala anda 7000 Job kidaikkuma?? Udaney business pannu solladinga...

கருடன் said...

// புறப்படுவதற்கு முன்பே விசா, நிறுவனம், சொன்ன வேலைக்கான உறுதி இவைகளைப் பற்றி நன்கு விசாரிக்காமல் விமானத்தில் ஏற உங்களுக்கு என்ன அவசரம்? //

Enga poi visarikkaradu nanbare?? anga work panra labour ellam ungala madiri romba padichavanga illa and also avangalukku vazhi katta namba nattula yaarum illa....

கருடன் said...

// வீடு, குடும்பம், மனைவி, மக்கள் அனைத்தையும் விட்டு இங்கு வந்து கோடிகளா சம்பாதிக்கப் போகிறீர்கள்? //

ivanga kooda irundu ellarum onna sandosama kasta padarada vida... Namba kasta pattu famaliy nalla irukkatum solli vara oru nalla ennam dan...

கருடன் said...

// இன்று நம் நாட்டில் ஒரு தொழிலாளியின் தினசரி ஊதியம் குறைந்த பட்சம் 300 ரூபாய் //

Really?? inda statistics enga irundu eduthinga?? India thirumbi vanda inda salary (Rs.300 / day) kidaikkum solli gurantee kodunga... 90% labour ippave kilambiduvanga...

கருடன் said...

// நமக்கு உதவ இங்கு யாரும் இல்லை.

சொந்த முயற்சி... கடின உழைப்பு.. கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டம் இவை இருந்தால் ஒழிய இங்கு தாக்குப் பிடிப்பது மிகக் கடினம் //

100% unmai....

கருடன் said...

// தகுந்த தகுதி, கூடிய அனுபவம், தன்னம்பிக்கை இவை இருந்தால் மட்டுமே வெளி நாட்டு வேலை எனும் ஆசையைக் கனவு காணுங்கள்... தயவு செய்து... //

idu ellam irunda en abroad vandu kasta padaporom...

கருடன் said...

// உங்க மனசுல என்ன தோணுதுண்ணு தயங்காமச் சொல்லுங்க!!! //

unga post oru labour nanbar kitta padichi kattiana appo avaru sonna comments dan mela nan update panni irukkadu... Thavaru irundal mannikkkkkaaaaaa....

Riyas said...

உண்மைதான்...

நல்ல பதிவு நண்பா..

vasan said...

இந்திய‌ வெளிநாட்டுத்தூத‌ர‌க‌ம்
வெளிநாட்டிந்திய‌ருக்கு வெகு..தூர‌ம்

MR.BOO said...

//கீழே உள்ள இணைப்பில் சென்று ஒரு பதிவினை படிக்கவும்.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2009/06/blog-post_22.html//

Thanks Mr. Manickam.
நெகிழ்வான பதிவு.. இது போன்ற நல்ல உள்ளங்களுக்கு தலை வணங்குகிறேன்.


//Jey said...

நிதர்சனமான உண்மைகள், எனக்கு தெரிந்து இதுமாதிரி அங்கு போய் கஷ்டப்படுகிற சில பேர் ஊருக்கு வந்து உண்மைகளை சொல்லுவதில்லை, மாறாக ஈசியான வேலை, நல்ல சம்பளம் என்ரு சொல்லிவிடுகிறார்கள், அதுவேகூட சிலசமயம், அடுத்தவர்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.//

You got the point Mr. Jey... Thanks



Thanks for your info Mr. Kannan.

MR.BOO said...

First of all thanks for your analysis & Frank comments Mr. Pandian.

//Ade oru lac kodutha Indiala anda 7000 Job kidaikkuma?? Udaney business pannu solladinga... //


வீடு குடும்பம் அனைத்தையும் விட்டு வந்து அடிமைபோல் உழைத்து ஈட்டும் இந்த ஏழாயிரத்தை சொந்த நாட்டில் இருந்து சம்பாதிக்க முடியும் எனும் போது...எதற்காக இங்கு வந்து கஷ்டப்பட வேண்டும்??

விசா டிக்கெட் இவற்றிற்கெல்லாம் நாற்பதாயிரம் வரும். மீதி முழுவதும் ஏஜெண்டுகள் மற்றும் நிறுவனங்களுக்கு ...

//Enga poi visarikkaradu nanbare?? anga work panra labour ellam ungala madiri romba padichavanga illa and also avangalukku vazhi katta namba nattula yaarum illa.... //

பணம் கொடுத்து ஏதாவது வாங்கும் போது கண்ணை மூடிக் கொண்டு யாராவது வாங்குவார்களா?
இதற்கெல்லாம் பெரிய கல்வியறிவு ஒன்றும் தேவையில்லை.
தூர்தர்ஷனிலும், வானொலிகளிலும் அடிக்கடி இந்த எச்சரிக்கை விளம்பரங்களைக் காணலாம். வெளிநாட்டில் வேலை பார்க்கும் நண்பர்கள், உறவினர்கள் இவர்களிடம் கேட்டு விசாரித்துக் கொள்ளலாம்.

//ivanga kooda irundu ellarum onna sandosama kasta padarada vida... Namba kasta pattu famaliy nalla irukkatum solli vara oru nalla ennam dan... //


இது ஒரு அர்த்தமில்லாத தியாகம் நண்பா.


//Really?? inda statistics enga irundu eduthinga?? India thirumbi vanda inda salary (Rs.300 / day) kidaikkum solli gurantee kodunga... 90% labour ippave kilambiduvanga... //

உங்கள் ஆதங்கம் புரிகின்றது.. நம் நாட்டில் ஆசாரி, கொத்தனார், மேஸ்திரி,
சித்தாள், நிமிந்தாள் இவர்களுக்கு தின ஊதியம் எவ்வளவு என்று விசாரித்துப் பாருங்கள்.

//// தகுந்த தகுதி, கூடிய அனுபவம், தன்னம்பிக்கை இவை இருந்தால் மட்டுமே வெளி நாட்டு வேலை எனும் ஆசையைக் கனவு காணுங்கள்... தயவு செய்து... //

idu ellam irunda en abroad vandu kasta padaporom... //


தகுதி உடையவர்களுக்கு இங்கு நல்ல வருமானம் கிடைக்கும். நாட்டில் ஐயாயிரம் வாங்கும் ஒரு நல்ல கணக்காளருக்கு இங்கு பத்து மடங்கு அதிக சம்பளம் கிடைக்கும்.
//
unga post oru labour nanbar kitta padichi kattiana appo avaru sonna comments dan mela nan update panni irukkadu... Thavaru irundal mannikkkkkaaaaaa.... //

Honestly Your feed backs are highly appreciated..

MR.BOO said...

Thanks Mr. Riyas & Mr. Vasan.

கருடன் said...

// First of all thanks for your analysis & Frank comments Mr. Pandian //

Unga Badilikku Nandri nanbare.... evvalavo panrom... Unga Padiviku oru vote poda mattama??? Pottachi.....

'பரிவை' சே.குமார் said...

nalla pathivu nanba. naanum abudhabiyil parkirean... paavam kasukkaaka kashtappadum jeevankal.

MR.BOO said...

Thanks for your vote Mr. Adimai-Pandian.
Thanks for your comment Mr. சே.குமார்.

சிநேகிதன் அக்பர் said...

நியாயமான கேள்விகள்.

முதலில் இந்த ஏஜெண்டுகளை ஒழித்து விட்டு அரசே நேரடி கண்காணிப்பில் நிறுவனங்களை அமைத்து ஆட்களை எடுத்தால் பிரச்சனை தீரும். செய்வார்களா?

Unknown said...

http://www.softwarescafe.com/sygic-gps-navigation-maps-full-free-download/

Post a Comment

உங்க மனசுல என்ன தோணுதுண்ணு தயங்காமச் சொல்லுங்க!!!