அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரை பொறுத்தல் தலை..
இது வள்ளுவப் பெருந்தகை எழுதி வைத்த பொன்மொழி...
ஆனாலும் பொறுமைக்கும் ஒரு பொறுமை உண்டு அல்லவா??
அண்மைக்காலங்களில் தொடர்ந்து நிகழும் இயற்கைச் சீற்றங்களைக் காணும் போது............ (சுனாமிகளும்...நில நடுக்கங்களும்...எரிமலை வெடிப்புகளும்...)
மனிதன் இயற்கையோடு
காண்பித்து வரும் கொடூரங்களைக் கண்டு...
மனம் வெறுத்து இயற்கையே இன்று திருப்பித் தாக்குகின்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது...
மாதக் கணக்கில் கசிந்து வரும் எண்ணெய்க் கசிவை நிறுத்த முடியாமல் அனைவரும் திணறும் போது..... முடிவாக இந்த முயற்சியில் இறங்கவிருக்கின்றார்கள் ...
தினமும் அவர்களது (கள்ளக்) கணக்கு படி சராசரியாக ஐயாயிரம் பேரல்கள் கசிகின்றது. ஆனால் உண்மையில் 25 ஆயிரம் பேரல்களுக்கும் மேல் கசிவதாக கணக்கு.
ரைசர்...எனப்படும் உடைந்து போன குழாய்களின் மூன்று துளைகள் வழியாக கடலுக்குக் கீழே ஐயாயிரம் அடி ஆழத்தில் அதி வேகத்தில் கசிந்து கொண்டிருக்கின்றது.
காங்கிரீட் கொண்டு கொட்டி துளைகளை அடைத்து விடுவோம் என்று வீராப்பு பேசியவர்கள் இன்று விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
இதே நம் இந்தியாவில் என்றால் குறைந்தது ஒரு ஊர்வலம் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று அரசியல்வாதிகள்க்கு கொண்டாட்டம்...பொது மக்களுக்கு திண்டாட்டம் ஆகியிருக்கும்.
இவ்வளவு பெரிய இயற்கைப் பேரழிவு....
ஆனால் எங்கு பார்த்தாலும் மௌனம்..
பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பண முதலைக்கு முன்பு வாய் திறக்க ஒபாமாவிற்கு கூட சின்ன தயக்கம்.
எண்ணெய் கசிவு அமெரிக்க தீரத்தைத் தொட்ட பின்னர்தான் இவரே சிறிதாக வாய் துறக்கின்றார்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
கசிவு...கசியும் வரை கசியட்டும்...
இதற்கிடையே... எரிகின்ற வீட்டில் பிடுங்குவதெல்லாம் லாபம் என்ற கணக்கில் 'சுத்தம் செய்கின்றேன் என்ற பெயரில் பல பண முதலைகளும் பில்லியன் கணக்கில் விழுங்க ஆரம்பித்து விட்டனர்.
சாதாரண முறையை விட மூன்று மடங்கு எண்ணைய் உறிஞ்சக் கூடிய தேங்காய் நார்கள் கொண்டு உருவாக்கிய கார்பெட் முறை என்னிடம் உள்ளது என்று ஒரு இந்தியர் கூவிக் கொண்டிருக்கிறார்.
கேட்பார் யாருமில்லை.
கடல் வாழ் உயிரினங்களுக்கு பேச வாய் இல்லை அல்லவா??
எண்ணையை விழுங்கி விழுங்கி சுவாசம் முட்டி அவைகள் இறப்பதைப் பற்றி யாருக்கு என்ன கவலை????
கொடுமைகளையும் கூத்தாட்டங்களையும் பார்த்துப் பார்த்து....நம் கையாலாகாத்தனத்தை நினைத்து நினைத்து நமக்கே நம் மீது வெறுப்பு வருகின்றது....
கூடுதல் செய்திகள்...
இது நம்ம நினெச்ச மாதிரி இல்ல மாமோய்
இவ்வளவு காசு போனாலும் பி பி க்கு தூசு
இத இப்படியே விட்டோம்னா...நம்ம கதி
இப்ப இங்க ஒரு மீட்டிங் நடக்குது.. என்னான்னு பார்ப்போம்.
இந்தக் கசிவு எப்படியெல்லாம் பரவுகின்றது என்பதை இன்றைய நாள் நிலவரப்படி தெரிந்து கொள்ள (கொல்ல??)
இதைப் பற்றி இங்கு இப்போது எழுதி புதிதாக புல் ஒன்றும் முளைக்கப் போவதில்லை... எல்லாம் செகுடன் காதில் ஊதிய சங்கு தான்...
சரி சரி நமக்கென்ன கவலை.
செம்மொழி மாநாடு...ராவணன்...பதிவர் சண்டை...படு மொக்கை... பார்ப்பனீயம்...விஜய் டிவி ஸ்டார் சிங்கர் ... அது இது என நமக்கு எழுத ஏராளம் இருக்கும் போது.... அடப் போங்கப்பா????
It's been a while since heavy rain caused massive floods in some parts of Europe.
You'll see some of the countries that suffer from it inside the post.
இயற்கை சொல்லாமல் சொல்கின்றது...
என் வயிற்றைக் கீறி நீ எண்ணைய் எடுத்தால் உன் வயிற்றில் நான் அடிப்பேன்...
14 comments:
//இதைப் பற்றி இங்கு இப்போது எழுதி புதிதாக புல் ஒன்றும் முளைக்கப் போவதில்லை... எல்லாம் செகுடன் காதில் ஊதிய சங்கு தான்...
சரி சரி நமக்கென்ன கவலை.
செம்மொழி மாநாடு...ராவணன்...பதிவர் சண்டை...படு மொக்கை... பார்ப்பனீயம்...விஜய் டிவி ஸ்டார் சிங்கர் ... அது இது என நமக்கு எழுத ஏராளம் இருக்கும் போது.... அடப் போங்கப்பா???? //
நல்ல புரிதல் ...
Thanks for your visit and comment Mr. தனி காட்டு ராஜா.
அண்ணன் ராட்மாதவ் உங்களை அறிமுகப்படுத்தினார். இந்த தொடர்பான் கட்டுரைய தட்ஸ்தமிழ்ல படித்தேன். ரொம்ப கொடுமையா இருக்கு.
Thanks for your visit & comment Mr. ஜீவன்பென்னி.
//ரொம்ப கொடுமையா இருக்கு.//
What can we do?... Just watch...thats all...
We can do nothing. Thanks Mr. Jeevan
உங்களின் வெளிப்படையான கருத்துக்கு பாராட்டுக்கள் . புகைப்படங்கள் அனைத்தும் அருமை .பகிர்வுக்கு நன்றி
Thanks for your visit and comments Mr. பனித்துளி சங்கர். Word verification now removed. Thanks Mr. Sankar.
நல்ல பதிவு வாழ்த்துக்கள் Mr. Boo..
Your name is quite interesting :-)
நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க சார்...
லீக்கேஜ் நம்ம ஊருக்கு வந்தா எங்க தலைவர் கலைஜர் பாத்துக்குவாரு.
Thanks for your visit and comment Mr. Vasavan.
Actually I am not entertaining anonys..Anyhow thanks for your visit and comment Mr. Anony
இயற்கையை நாம் சோதிக்கிறோம், அது நம்மை தண்டிக்கும் வாய்ப்பு அதிகம்....
பகிர்வுக்கு நன்றி நண்பரே
Thanks for your visit and comment dear friend.
நல்ல பதிவு!
Thanks for your visit and comment Mr. Thekkikattan|தெகா.
Post a Comment
உங்க மனசுல என்ன தோணுதுண்ணு தயங்காமச் சொல்லுங்க!!!