Thursday 5 August 2010

விலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,


பெட்ரோல்  டீசல்    விலை சாதாரண சாமான்ய இந்தியனின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் பொன்னான கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இதற்கு மட்டும் ஒரு விடிவு காலம் இல்லை.

பெட்ரோல் டீசல்  விலை ஒரு முறை உயர்ந்தாலே போதும்.

விலை வாசி உயர்வுக்கு இது ஒரு அஸ்திவாரம் மட்டுமே.

இது உயர்ந்தால் வண்டி வாடகை உயரும்.

வண்டி வாடகை உயர்ந்தால் அனைத்து சாதனங்களின் விலையும் தானாகவே உயர்ந்து விடும்.
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் புண்ணியத்தால் கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 142 டாலராக இருந்த போது தடால் என இங்கு  விலை உயர்வு வந்தது.

அது  நியாயமான ஒன்று என எண்ணலாம்.

அடுத்த சில மாதங்களில்  முப்பது முதல் நாற்பது டாலராக குறைந்த போது இங்கு விலை குறைக்கப்படவில்லை.

ஆளுங்கட்சிகளும் எதிர்கட்சிகளும் இந்த விசயத்தில் சொல்லி வைத்துக் கொண்டு விளையாடுவார்கள்.

நான் நாலு ரூபாய் கூட்டுகிற மாதிரி கூட்டுகிறேன். நீ போராட்டம் பண்ணு. பதிலுக்கு ஒரு ரூபாய் குறைத்து விடுகின்றேன் என்று கண்ணா மூச்சி விளையாடுவார்கள்.
நாலு ரூபாய் கூடிய விஷயத்தை இந்த ஒரு ரூபாய் விலைக் குறைப்பு மறைத்து விடும்.   

நாமும் அதை மறந்து விட்டு 'டீலா நோ டீலா, மானாட மயிலாட' பார்த்துக் கொண்டிருப்போம்.

சில நாட்களுக்கு முன் மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா அறிக்கை விட்டிருக்கின்றார்.

விலை உயர்வுக்கு அவர் சொல்லும் காரணம், இந்திய எண்ணைய்க் கம்பனிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை தான்.

இவர் சொல்லுவதைப் பார்த்தால் இந்த நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றும்.

ஆனால் என்ன கொடுமை சரவணன் சார் இது???


நடுத்தர இந்தியனின் ரத்தத்தை டியூப்  வைத்து உறிஞ்சும் இந்தக் கம்பனிகளின் வருமானம் மற்றும் லாபத்தைப் பார்த்தால்.... நமக்கே தலை சுற்றும்.

 
Profit in 2009-10
Rs. 7,35,90,000,000

இந்த ஏழை நிறுவனங்கள் செழிப்பதற்காக, வளர்வதற்காகத்தான் இந்த விலையேற்றம்.
 
கூடுதலாக ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம்.

நம் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மொத்த மக்கள் தொகையில் நாற்பது சதவிகிதத்திற்கும் கூடுதல் உள்ள ஏழை மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணையின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது,  இனியும் உயர்த்தபடவுள்ளது.


கூடுதல் சிறப்பாக தமிழகத்தில் இப்போது மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 


இந்தக் கனவான்கள் எல்லாம் நன்றாக இருக்கட்டும்.  நல்லா இருங்க ராசாக்களா?

'குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம், உங்களுக்குக்  கிடைச்ச அடிமைகள் ரொம்ப நல்லவங்க'

9 comments:

ஜீவன்பென்னி said...

நாம் பொலம்புறதால ஒரு பிரயோசனமும் இல்லங்க. இந்த விசயத்த எதிர் கட்சிகள் எதிர்க்காத வரைக்கும் விடிவு கிடைக்காது.

raja said...

என்னத்தச்சொல்ல.... நீங்க எழுதுங்க... கத்துங்க... நாங்க எங்க வேலைய பாத்துக்கிட்டு எங்க பொண்டாட்டி பிள்ளைகளுக்கு ஆயிரம் கோடிகள் சொத்து சேர்த்து உங்கள நடுத்தெருவுல பிச்சை எடுக்கவைக்கனும் ... இல்லாட்டி ஏழை விவசாயிகள் மாதிரி தற்கொலை செய்து கொள்..... இப்படிக்கு.. மன்மோகன்.. மற்றும் மந்திக்கூட்டங்கள்... கருணா.. ஜெயா அல்லக்கைகள்..

'பரிவை' சே.குமார் said...

///'குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம், உங்களுக்குக் கிடைச்ச அடிமைகள் ரொம்ப நல்லவங்க' ///

உண்மைதான் நண்பரே... 500க்கும் 1000க்கும் ஆசைப்பட்டு ஓட்டுப் போட்டுவிட்டு இப்ப தலைச்சுமையை சுமக்க முடியாமல் தவிக்கிறோம். என்ன நடந்தாலும் நாம் திருந்த மாட்டோம்.

Jey said...

///நடுத்தர இந்தியனின் ரத்தத்தை டியூப் வைத்து உறிஞ்சும் இந்தக் கம்பனிகளின் வருமானம் மற்றும் லாபத்தைப் பார்த்தால்.... நமக்கே தலை சுற்றும்.///

அதான் ஒட்டுபோடுறப்ப இப்பெல்லாம், பணம் வாங்காம ஓட்டுபோடுரதே இல்லை... எப்புடீ.

Butter_cutter said...

good

ESWARAN.A said...

திருப்பூரில் 4ம்தேதி திரு.பிரகாஸ் காரத் சி.பி.எம்.பொதுச்செயலர் பேசும்போது,100 ரூபாய் பெட்ரோல் அடித்தால்,அதில் 54 ரூபாய் அரசாங்கத்திற்கு வரியாகச்செல்கிறது என்றார்.முன்பு இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சி நடைபெற்ற போது,விலைவாசி உயர்விற்கு கடிவாளமாக இடதுசாரிகள் இருந்தார்கள். மக்கள் இடது சாரிகளைப்புறக்கணித்தன் விளைவை தற்போது அனுபவிக்கிறார்கள்!

விரைவில் இந்தியாவிற்கு ரூ.3 கோடி மதிப்புள்ள ஆஸ்டின் கார்கள் வரவிருக்கிறதாம். ஏனென்றால் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தக்கார் வாங்கும் அளவிற்கு கோடீசுவட்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதாம்...

m.ramesh said...

பெட்ரோல் ல விடுங்க சார் !! இப்ப பஸ் சார்ஜ் எல்லாம் ஏத்திட்டாங்க!! சாதாரண மக்கள் இனி பஸ் லயும் போக முடியாது . இவங்க ப்ரீயா லேப்டாப்,மிக்ஸ்சி,fan இதெல்லாம் கொடுத்து முதல் அமைச்சர் நம்ம பணத்தையே எடுத்து நம்மகிட்டேய கொடுத்து இதெல்லாம் தரலன்னு யாரு சார் கேட்டா? ஏமாரவங்க இருக்கிற வரைக்கும் ஏமாதுரவனக இருக்க தான் செய்வாங்க !!! ஒரு புரட்சி ஏற்பட்டால் தான் இவங்கள எல்லாம் விரட்ட முடியும்.

santhosh said...

ippo irruka bus rate ha discrease pannunga please ....
by
makkalil oruvan

santhosh said...

milk rate ha 6rs increase panna enna pandrathu daily 100 rs sambalam vanguravanga nellama enna amma pls consider your ethics

Post a Comment

உங்க மனசுல என்ன தோணுதுண்ணு தயங்காமச் சொல்லுங்க!!!